செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு... அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு.!

By Asianet TamilFirst Published Sep 9, 2020, 9:07 AM IST
Highlights

செப்டம்பர் 21ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே மாதத்திலிருந்து மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த அடிப்படையில் மத்திய அரசு தற்போது 9-12 வகுப்புகளைத் தொடங்கலாம் என பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர்கள், மாணவர்கள் வழிகாட்டுதல்களைப் பெறு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம். பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.


மேலும் மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில், ‘பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். பள்ளி, வகுப்பறையில் 6 அடி தூர சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். பள்ளியில் முகக்கவசம் அணிவது கட்டயம், பள்ளியில் இருக்கும்போது அடிக்கடி சோப்பு நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.’ என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
முதல் கட்டமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் பள்ளிக்கு வர  அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைத் தொடங்கும்பட்சத்தில் வளாகம் முழுவதையும் தூய்மைப்படுத்த வேண்டும். ஒருவேளை பள்ளி வாளகம் தனிமைப்படுத்தும் மையங்களாக செயல்பட்டிருந்தால், அந்தப் பள்ளிகள் முறையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டுள்ளன. அதேவேளையில் ஆன்லைன் கல்வி முறையைத் தொடர்ந்து அனுமதித்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்” என்று அறிவிப்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

click me!