satyendra nath bose: சத்தியேந்திர நாத் போஸுக்கு டூடுள் வெளியிட்டு கொண்டாடிய கூகுள் : யார் இவர்?

By Pothy RajFirst Published Jun 4, 2022, 7:43 AM IST
Highlights

Satyendra Nath Bose: இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய கணிதவியல் மேதை, இயற்பியல் விஞ்ஞானி சத்தியேந்திர நாத் போஸ். சத்யேந்திர நாத் போஸ் ஆய்வு செய்வது போன்ற காட்சியைத்தான் கூகுள் டூடுளாக வெளியிட்டுள்ளது. 

இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய கணிதவியல் மேதை, இயற்பியல் விஞ்ஞானி சத்தியேந்திர நாத் போஸ். சத்யேந்திர நாத் போஸ் ஆய்வு செய்வது போன்ற காட்சியைத்தான் கூகுள் டூடுளாக வெளியிட்டுள்ளது. 

எதற்காக டூடுள்
கடந்த 1924ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி சத்தியேந்திர நாத் போஸ் தனது குவான்டம் ஃபார்முலாக்களை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். குவான்டம் மெக்கானிக்ஸ் குறித்த சத்தேயந்திர நாத் போஸின் முக்கிய கண்டுபிடிப்புகள் அடங்கிய தொகுப்பை இந்தியாவில் இருந்த விஞ்ஞானிகள் ஏற்க மறுத்துவிட்டனர். ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு சத்தியேந்திர நாத்போஸ் ஆய்வுகளை அனுப்ப அவர் குவான்டம் மெக்கானிக்ஸ் ஆய்வுகளை ஏற்றுக்கொண்டார் இந்தியாவுக்கும் பரிந்துரைத்தார்
குவான்டம் மெக்கானிக்ஸ் ஆய்வுகளை அனுப்பிய நாளின் நினைவாகத்தான் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு சத்தியேந்திர நாத் போஸுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. 

யார் இந்த சந்தியேந்திர நாத் போஸ்

கடந்த 1894ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள பாரா எனும் கிராமத்தில் சத்தியேந்திர நாத் பிறந்தார். இவருடன் 7 சகோதரிகள் பிறந்தனர், குடும்பத்தில் சத்தியேந்திர நாத் போஸ் மட்டும் ஆண்வாரிசாக இருந்தார்.
5 வயதிலேயே பள்ளிக்கல்வியைத் தொடங்கிய சத்தியேந்திர நாத் போஸ், நியூ இந்தியன் பள்ளியில் ஆரம்பப்பள்ளியைப் படித்து, இந்துப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்ஸி கல்லூரியில் இயற்பியல் கணிதம் கலந்த பட்டப்படிப்பை சத்தியேந்திர நாத் முடித்தார். 

முதுநிலை பட்டப்படிப்பு
1915ம் ஆண்டு முதுநிலை அறிவியல், கணிதம் கலந்த பட்டப்படிப்பை சத்தியேந்திர நாத் படித்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் யாரும் எடுக்காத மதிப்பெண்களைப் பெற்றார்.

ஆய்வுக்கட்டுரை நிராகரிப்பு
அதன்பின் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறையில் சேர்ந்து, ரிலேட்டிவிட்டி தியரி குறித்து சத்தியேந்திர நாத் போஸ் ஆய்வு செய்தார். பல்வேறு மொழிகளைக் கற்று அறிந்த போஸுக்கு,வங்காளம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளை சத்தியேந்திரநாத் கற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் இரவுநேர பள்ளிகளையும் போஸ் தொடங்கி நடத்தினார்.

பல்கலைக்கழக்தில் முதுநிலை மாணவர்களுக்கு சத்தியேந்திர நாத் போஸ் வகுப்பு எடுத்தார். அப்போது , “பிளாங்க்கின் ரேடியேஷன் ஃபார்முலா” குறித்து கேள்வி எழுப்பி,எவ்வாறு துகள்கள் ஒன்று சேர்கின்றன என்று கேள்வி எழுப்பினார் .
அதன்பின், அதுகுறித்து சத்தியேந்திர நாத் சொந்தமாக ஆய்வு செய்யத் தொடங்கினார். அதற்கு “பிளாங்க் லா மற்றும் ஹைபோத்தீசிஸ் ஆஃப் லைட் குவான்டம்” என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரையை “தி பிலாசோபிக்கல் மேகஜினுக்கு” அனுப்பினார் ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.

ஐன்ஸ்டீன் ஏற்பு
இதையடுத்து, இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு தனது ஆய்வுக்கட்டுரையை சத்தியேந்திர நாத் அனுப்பி வைத்தார். சத்தியேந்திர நாத் போஸின் ஆய்வுக்கட்டுரையைப் படித்த ஐன்ஸ்டீன் போஸின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டு இந்திய இயற்பியல் ஃபார்முலாவில் பயன்படுத்த பரிந்துரைத்தார்

குவான்டம் தியர் தொடர்பான ஆய்வுகளில் போஸின் ஆய்வுக்கட்டுரையை முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இயற்பியல், கணிதம் தவிர்த்து, பயோடெக்னாலஜி, வேதியியல், புவியியல், மானுடவியல், பொறியியல் ஆகியவற்றிலும் போஸ் தீவிர ஆர்வமாக இருந்தார். 

பத்மவிபூஷன் விருது

வங்கதேசத்தில் தாகா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவு தலைவராக போஸ் பணியாற்றினார். தேசம் சுதந்திரம் அடைந்தபின், கொல்கத்தாவில் உள்ள சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக போஸ் செயல்பட்டார். போஸின் செயல்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவருக்கு 1954ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்து. தேசியஅளவிலான பேராசிரியர் என்றும்இந்திய அரசு போஸை அங்கீகரித்தது.
நாட்டில் உள்ள ஏராளமான அறிவியல் கல்விநிலையங்கள், அறிவியல் அமைப்புகள், இந்திய அறிவியல் காங்கிரஸ், இந்திய புள்ளியியல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு தலைவராக போஸ் இருந்துள்ளார். ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் போஸ் இருந்தார். 
 

click me!