சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் விசாரிக்க போவதில்லை... வேற லெவல்ல விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு..!

By vinoth kumarFirst Published Jan 13, 2020, 11:44 AM IST
Highlights

சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையைப் பெரிய அமர்வுக்கு மாற்றுவதாகக் கடந்த நவம்பர் 14-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்களை விசாரிக்கபோவதில்லை என வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் அமர்வு அதிரடியாக அறிவித்துள்ளது.

சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையைப் பெரிய அமர்வுக்கு மாற்றுவதாகக் கடந்த நவம்பர் 14-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

ஆனால், சபரிமலை விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, சபரிமலை தொடர்பான வழக்குகளை தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தவிர, இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அஷோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம். சந்தானகவுடர், எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என நீதிபதிகள் அதிரடியாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள நீதிபதிகள் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்படும். பெண்கள் கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என விசாரிக்க உள்ளதாகவும் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகளை தான் விசாரிக்க இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காலாமா என்பது மட்டும் குறித்து விசாரிக்கப்போவதில்லை எனவும் மத விஷயங்களில் பாகுபாடுகள் காட்டலாமா? அதை கடைபிடிக்கலாமா? என்பது குறித்து நுணுக்கமாக கவனிக்க இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

click me!