ரோஜ்கர் மேளாவில் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி!

By SG Balan  |  First Published Sep 26, 2023, 1:54 PM IST

இளைஞர்களை அரசாங்கத்தில் சேர்ப்பது கொள்கைகளை விரைவாக செயல்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.


ரோஜ்கர் மேளாவின் கீழ் மத்திய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்படும் சுமார் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் வழங்கினார். இன்று பணி நியமன ஆணையைப் பெற்றுக்கொண்ட அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

பணிநியமன ஆணை பெற்றவர்களில் பலர் பெண்களாக உள்ளதை கவனப்படுத்திப் பேசிய பிரதமர், "இந்தியாவின் ஏராளமான மகள்களுக்கு இன்று பணி நியமன ஆணை கிடைத்துள்ளது. இந்தியாவில் இன்று பெண்கள் விண்வெளித் துறை முதல் விளையாட்டு வரை புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர்" என்று கூறினார். பெண்களின் சாதனைகளை எண்ணி பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழியில் வாதிட்ட வழக்கறிஞர்!

லட்சக்கணக்கான இளைஞர்களை அரசாங்கத்தில் சேர்ப்பது கொள்கைகளை விரைவாக செயல்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.

Rozgar Mela stands as our dedicated effort to empower young individuals and strengthen their active engagement in the country's development. https://t.co/S1ZBRkXcR7

— Narendra Modi (@narendramodi)

ரோஜ்கர் மேளா

ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 46 இடங்களில் நடைபெறுகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள துறைகள் முழுவதும் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. புதிய ஆட்கள், தபால் துறை, இந்திய கணக்குத் தணிக்கைத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும்  குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

பணி நியமன ஆணையைப் பெறும் அனைவருக்கும் கர்மயோகி கையேடு விநியோகிக்கப்படும். கர்மயோகி கையேடு என்பது பல்வேறு அரசு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கான வழிகாட்டல் தொகுப்பு ஆகும்.

செத்த எலியை வாயில் வைத்து போராடும் தமிழக விவசாயிகள்! காவிரி நீரைத் திறக்குமா கர்நாடகா?

click me!