எச்சரிக்கை..!! கருப்பு பணத்தை மாற்ற உதவும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை..!!! - ரிசர்வ் வங்கி

First Published Nov 23, 2016, 6:06 PM IST
Highlights


கடந்த 8 ஆம் தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பழைய பணத்தை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.மேலும், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, கருப்பு பணத்தை  பதுக்கி வைத்தவர்கள் குப்பைதொட்டிகளிலும், தெருக்களிலும் பணத்தை வீசி சென்றனர். ஒரு சிலர் தங்களது பணத்தை உரிய ஆவணங்களில்லாமல் வங்கி அதிகாரிகளிடம் கொடுத்து மாற்றி கொள்வதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் 2 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

எனவே, வங்கிகள் பெறும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பழைய ரூபாய் நோட்டுகள் எப்படி பெறப்படுகிறது என்ற முழு விவரத்தை முறையாக கணக்கு வைக்க வேண்டும்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வளவு பெறப்பட்டது , அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விவரங்கள் போன்றவற்றை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

மாலையில் வங்கி கணக்கு இறுதி செய்யும்போது எவ்வளவு புதிய ரூபாய் நோட்டு இருப்பு உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அந்தந்த வங்கி தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

வங்கியில் பெரிய தொகை டெபாசிட் செய்பவர்கள் விவரங்களை உடனடியாக வருமானவரி துறைக்கு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்த  விதிகளை மீறி செயல்பட்டால் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

click me!