59 பைசாவாக குறைந்த ரிலையன்ஸ் பங்கு விலை: ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா

By Selvanayagam PFirst Published Nov 17, 2019, 7:49 AM IST
Highlights

ரிலையன்ஸ் தகவல்தொடர்பு நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி திடீரென இன்று ராஜானாமா செய்துள்ளார்.
 

வோடபோன் இந்தியா நிறுவனத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய இழப்பை ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்தது.  இதையடுத்து, ரிலையன்ஸ் தகவல்தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி  நேற்று  திடீரென விலகியுள்ளார். 

அனில் அம்பானியுடன் சேர்த்து, சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சாரி காகர், சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் இயக்குநர் பதவியில் இருந்து விலகியுள்ளார்கள். இந்த தகவலை மும்பை பங்குச்சந்தையி்ல ரிலையன்ஸ் தகவல்தொடர்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ரூ.1,141 கோடி லாபத்தில் ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனம் இருந்தது.

ஆனால் ஸ்பெக்ட்ராம் பயன்பாட்டுக்கு கட்டண பாக்கி, உரிமைக் கட்டணம் ஆகியவற்றால் 2-வது காலாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுத்துள்ளார்இதைத்தொடர்ந்து டி விஸ்வநாத் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடைய ரிலையன்ஸ் தகவல்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.47 ஆயிரம் கடன் பாக்கி இருப்பதால், கடன்மீட்பு மற்று திவால் நோட்டீஸ் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நிலவரப்படி ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஒரு பங்குவிலை ரூ.163.17 பைசாவாக இருக்கிறது. தற்போது அனில் அம்பானி ராஜினாமாவைத் தொடர்ந்து திங்கள்கிழமை பங்குசந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும்.

click me!