டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் வொர்லி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் காலமானார்.
undefined
இவரது மறைவைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தெற்கு மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ., அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரத்தன் டாடாவின் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் உள்ளிட் டமுக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவரது உடல் வொர்லி மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தின் போது ரத்தன் டாடா முகத்தை பார்த்த படியே பிரிய மனமில்லாமல் பக்கத்தியே உட்கார்ந்த வளர்ப்பு நாய் கோவா அவரது முகத்தை அப்படியே பார்த்தபடி நின்றது. இதுதொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.