எங்கள வெறுப்பேத்தனும்னு பண்றீங்களா? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல பாத்துக்கோங்க... புலம்பும் ராமதாஸ்

By sathish kFirst Published Jul 13, 2019, 4:06 PM IST
Highlights

தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் அந்தத் தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும்.
 
எதிராளிக்கு சரி, கூட்டணி கட்சியினரும் சரி ராமதாஸ் போடும் டிவீட்டை பார்த்து கலங்கிப்போவார்கள், அந்த ரெண்டுவாரி ட்வீட் பரபரப்பாக இருக்கும். சிந்திக்க வைக்கும். ஊமைக் குத்து குத்துவதாக இருக்கும். குசும்பும் தெறிக்கும். அதேபோலத்தான் பேஸ்புக்கிலும் அவ்வப்போது ஏதாவது பற்ற வைத்து விடுவார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை ராமதாஸ் டீல் செய்வது குறித்த ட்வீட். ஒன்னு போதும்... அன்றைய நாள் முழுவதும் எல்லா கட்சிகளும் மண்டையை பிய்த்து கொள்வதுதான் வேலையாக இருக்கிறது.   

இந்நிலையில் ராமதாஸ் இன்று ட்வீட் போட்டுள்ளார் அதில்; அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில்  திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்!

தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் அந்தத் தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும்.

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், அஞ்சல்துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். தமிழே தெரியாத அவர்களை தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்? என கூறியுள்ளார்.

click me!