ராஜீவ்காந்தி மரணத்தில் நடந்தது என்ன...? இன்று 27வது நினைவு தினம்

 
Published : May 21, 2018, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
ராஜீவ்காந்தி மரணத்தில் நடந்தது என்ன...?   இன்று 27வது நினைவு தினம்

சுருக்கம்

rajive gandhi assasination

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி. இளம் வயதிலேயே அதாவது தமது 40வது வயதிலே இந்தியாவின் பிரதமர் ஆனார். நாட்டின் தலைமுறை மாற்றத்தை உணர்த்தும் தலைவராக ராஜீவ் காந்தி திகழ்ந்தார். தேசிய வரலாற்றில் ராஜீவ் காந்திக்கு முக்கிய பங்கு உண்டு. சுட்டுக் கொல்லப்பட்ட தனது தாயாரின் இறுதிசடங்க முடிந்த உடனே அவர் மக்களவை தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அந்த தேர்தலில் ஏழு ஆண்டுகளாக இல்லாத அளவு ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ்  வென்றது.  

508 தொகுதிகளில் 401 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன.

செய்தது யார்?

ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நட்த்தப்பட்ட்து. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி எனத் தெரியவந்தது.

ஏன் செய்தனர்?

இந்திய அமைதிக் காக்கும் படை என்கிற பெயரில் ராஜுவ் காந்தி காந்தி தலைமையிலான அரசு ராணுவத்தை அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாட்சி முறையிலான உரிமையை தர முயன்றது. மாறாக ராணுவம் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களை, குழந்தைகளை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. இதனால் விடுதலைப் புலிகள் தற்கொலைபடையின் மூலம் ராஜீவ் காந்தியை அழித்தொழித்துள்ளது.

 நடந்தது என்ன?

ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார்.அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார்.

அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாலை அணிவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் (RDX) வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு.

ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்

இன்று

இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்  காங்கிரசின் மூத்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான, மல்லிகார்ஜூன் கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும், தொண்டர்களும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

மன்னிக்கத் தயார்

ராகுல் காந்தி தன் தந்தையின் படுகொலைக்கு காரணமான நபர்களைதான் மன்னிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்