பொது இடத்தில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை அமைச்சர்!

 
Published : Feb 15, 2018, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
பொது இடத்தில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை அமைச்சர்!

சுருக்கம்

Rajasthan Health Minister Pissing in Public Places

ராஜஸ்தான், பிங்க் சிட்டி சுவர்களில் சிறுநீர் கழித்த மாநில சுகாதார துறை அமைச்சர் காளிச்சரனின் புகைப்படும் வைரலாக பரவி வருகிறது. 

ராஜஸ்தானில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானின் பிங் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்பூர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி காளிச்சரண் சாரப் டோல்பூர் இடைத்தேர்தல் பணிக்காக சென்று கொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள கட்டடம் ஒன்றின் சுவரில் மீது சிறுநீர் கழித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து, அமைச்சர் காளிச்சரணிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.  இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல என்று கூறிவிட்டார்.

இதுகுறித்து, ராஜஸ்தான் காங்கிரஸ் துணை தலைவர் அர்ச்சனா ஷர்மா கூறும்போது, ஸ்வாஸ்பாரத் மீது அதிக பணம் செலவழிக்கப்படும் நேரத்தில் அமைச்சரின் இந்த செயல் வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் சுகாதார துணை அமைச்சர், பொது இடத்தில் சிறுநீர் கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!