ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி... ராகுலின் முடிவு என்ன?

By vinoth kumarFirst Published Dec 12, 2018, 12:39 PM IST
Highlights

ராஜஸ்தானின் முதல்வர் யார் என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுலின் நம்பிக்கைக்குரியவராக திகழ்பவர் சச்சின் பைலட், ஆகையால் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்து அசோக் ஜெலடுக்கும் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானின் முதல்வர் யார் என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுலின் நம்பிக்கைக்குரியவராக திகழ்பவர் சச்சின் பைலட், ஆகையால் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்து அசோக் ஜெலடுக்கும் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றள்ளது. அதே நேரத்தில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அனைத்து மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது. 

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 200 இடங்களில் காங்கிரஸ் 100 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் சார்பில் சச்சின் பைலட் மற்றும் அசோக் ஜெலட் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று இரவு அசோக் ஜெலட் வீட்டில் நடந்தது. அப்போது அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. 

இதையடுத்து, புதிதாக தேர்வாகி உள்ள எம்எல்ஏக்களை கூட்டி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் யார் என்பது முடிவு செய்து, மாலை 5 மணிக்கு அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் சார்பில்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

click me!