இலங்கையில் இடியாப்பச் சிக்கலுக்கு தீர்வு... ராஜபக்சே ராஜினாமா..!

By manimegalai aFirst Published Dec 15, 2018, 2:56 PM IST
Highlights

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ, தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அங்கு நிலவிய அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ, தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அங்கு நிலவிய அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதனால், அக்டோபர் 26 ஆம் தேதி ஆரம்பித்த இலங்கையின் அரசியல் நெருக்கடி, டிசம்பர் 15 ஆம்தேதியான இன்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. 

இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவால் கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி பிரதமராக அதிரடியாக நியமிக்கப்பட்டார் மஹிந்த ராஜபக்சே.  இலங்கை நாடாளளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தோற்கடிக்கப்பட்டார் ராஜபக்சே.  அவரது, பதவியேற்பு சட்டத்துக்கு முரணானது சர்வதேச நாடுகள் விமர்சித்தன. 

இந்த நிலையில், அதிபர் சிறிசேனா தன்னால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கேவிடம் நேற்று மாலை தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார். அதன்பிறகே இந்தவிவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.இதனையடுத்து கொழும்புவில் தனது இராஜினாமா கடிதத்தில் ராஜபக்சே இன்று கையெழுத்திட்டார். இதனிடையே, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமாராக பதவியேற்க இருக்கிறார்.

 புதிய அமைச்சரவை திங்கட்கிழமை பதவியேற்க உள்ளது. 50 நாட்கள் நீடித்த இந்த அரசியல் குழப்பம் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச நாடுகளிலும் எதிரொலித்தது. டிசம்பர் 13 ஆம் தேதி இலங்கை உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்குப் பிறகே இந்த குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது. 
 

click me!