இந்தியாவில் கொடூர முகத்தை காட்டும் கொரோனா... வேறு வழியில்லாமல் திருமணத்தை நிறுத்திய துணை ஆட்சியர்...!

By vinoth kumarFirst Published Mar 26, 2020, 1:16 PM IST
Highlights

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமூத் பகுதியைச் சேர்ந்தவர் ஷீட்டல் பன்சால். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ராய்ப்பூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஆயுஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் ஷீட்டல் பன்சால் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார். 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது திருமணத்தை ராய்ப்பூர் துணை ஆட்சியர் ஷீட்டல் பன்சால் ஒத்திவைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மனிதர்கள் மூலமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகள் முடங்கி உள்ளனர். இதுஒருபுறமிருக்க புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை கொரோனாவால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் நாடு முழுவதும் 20 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த திருமணத்தை கூட்டம் கூடாமல் நடத்தி கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், பல்வேறு மாநிலங்களில் திருமணம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் மகாசமூத் பகுதியைச் சேர்ந்தவர் ஷீட்டல் பன்சால். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ராய்ப்பூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஆயுஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் ஷீட்டல் பன்சால் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

click me!