ராகுல் காந்திக்கு புதுச் சிக்கல்! அபய முத்திரை பேச்சுக்கு விளக்கம் கேட்கும் மதத் தலைவர்கள்!

By SG Balan  |  First Published Jul 2, 2024, 7:48 PM IST

திங்கட்கிழமை மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சைப் பற்றி கருத்து கூறியுள்ள பல்வேறு மதங்களின் தலைவர்கள் ராகுல் ​​காந்தியில் பேச்சில் அபய முத்திரை பற்றி பேசியதற்கு விளக்கம் கேட்டுள்ளனர்.


மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மதச் சின்னங்கள் மற்றும் போதனைகளைக் குறிப்பிட்டு அரசை விமர்சித்து பேசிய உரை வைரலாகி இருக்கிறது. அதே நேரத்தில் அது சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.

சுமார் ஒன்றே முக்காமல் மணி நேரம் உரையாற்றிய அவர், சிவபெருமானின் அபய முத்திரையைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது சிவபெருமானின் படத்தையும் காட்டினார். இது பாஜக கூட்டணி உறுப்பினர்களை ஆத்திரமூட்டியது. அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

அகிம்சையைப் பற்றியும் பாஜகவை எதிர்த்துப் போராடுவதில் பல்வேறு மதங்களின் பங்கு பற்றியும் ராகுல் காந்தி பேசினார். அவரது பேச்சின்போது நரேந்திர மோடி இரண்டு முறை இடைமறித்துப் பேசினார். இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என ராகுல் காந்தி கூறியதும், மோடி உடனே எழுந்து, இந்துக்கள் அனைவரையும் வன்முறையாளர்கள் என்று சொல்வது தவறு என்று சொன்னார்.

பாஜக நீட் தேர்வை வணித் தேர்வாக மாற்றிவிட்டது! மக்களவையில் அனல் பறக்கப் பேசிய ராகுல் காந்தி!

ராகுல் காந்தியின் கருத்துக்கள் இந்து மதத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்துமதத் தலைவர்கள் கூறியுள்ளனர். ராகுல் காந்தியின் பேச்சைக் கண்டித்துள்ள சுவாமி அவதேஷானந்த் கிரி, "இந்துக்கள் அகிம்சை மற்றும் ஒற்றுமைக்கு பெயர் பெற்றவர்கள் என்றும் ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் அவமதிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரித்து வெறுப்பை பரப்பியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கோரினர். இதேபோல், அகில இந்திய சூஃபி சஜ்ஜதநாஷின் கவுன்சிலின் தலைவர் சையத் நஸ்ருதீன் சிஷ்டி மற்றும் அஜ்மீர்  தர்கா ஷெரீப் ஹாஜி சையத் சல்மான் சிஷ்டி ஆகியோர் அபய முத்ரா இஸ்லாத்துடன் தொடர்புடையது என்ற ராகுல் காந்தியின் கூற்றை மறுத்துள்ளனர்.

இது போன்ற சைகைகளுக்கு இஸ்லாமிய வழிபாட்டிலோ அல்லது புனித நூல்களிலோ இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். ராகுல் காந்தி தவறான குறியீடுகளை இஸ்லாத்துடன் இணைத்துப் பேசுவதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

பாட்னா குருத்வாரா தலைவர் ஜக்ஜோத் சிங், சீக்கியம் உள்பட மதங்களைப் பற்றிய துல்லியமான தகவல்கள் இல்லாமல் ராகுல் காந்தி பேசியிருக்கிறார் என்று கூறுகிறார். கருத்துகளை வெளியிடுவதற்கு முன் மத போதனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

திங்கட்கிழமை மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சைப் பற்றி கருத்து கூறியுள்ள பல்வேறு மதங்களின் தலைவர்கள் ராகுல் ​​காந்தியில் பேச்சில் அபய முத்திரை பற்றி பேசியதற்கு விளக்கம் கேட்டுள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து தீவிர விசாரணை நடக்கிறது: மக்களவையில் மோடி உறுதி

click me!