ராகுல், பிரியங்காவை கலாய்த்த பாஜக... மோடி, அமித்ஷாவுக்கு ஓவர்டோஸ் கொடுத்த காங்கிரஸ்!

Published : Jan 29, 2019, 05:08 PM IST
ராகுல், பிரியங்காவை கலாய்த்த பாஜக... மோடி, அமித்ஷாவுக்கு ஓவர்டோஸ் கொடுத்த காங்கிரஸ்!

சுருக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுலையும் பிரியங்காவையும் ஓ.ஆர்.ஓ.பி. (OROP - Only Rahul Only Priyanka) ஒரே ராகுல்; ஒரே பிரியங்கா) என்று விமர்சித்த பாஜக தலைவர் அமித்ஷாவை ஓடோமாஸ் என காங்கிரஸ் கூட்டணி கட்சி கிண்டல் செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுலையும் பிரியங்காவையும் ஓ.ஆர்.ஓ.பி. (OROP - Only Rahul Only Priyanka) ஒரே ராகுல்; ஒரே பிரியங்கா) என்று விமர்சித்த பாஜக தலைவர் அமித்ஷாவை ஓடோமாஸ் என காங்கிரஸ் கூட்டணி கட்சி கிண்டல் செய்துள்ளது.

பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பற்றி பாஜக தலைவர் அமித் ஷா கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸை பொறுத்தவரை ஓ.ஆர்.ஓ.பி. என்றால் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா என்று கிண்டல் செய்திருந்தார். காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல் செய்து வருகிறது என்று பாஜக கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறது. 

எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் அந்தக் கட்சியில் வாரிசுகள் மட்டுமே தலைமை பொறுப்பு வருகிறார்கள் என்றும் பாஜக விமர்சித்து வருகிறது. அதை எதிரொலிக்கும் வகையில்தான் ஓ.ஆர்.ஓ.பி. என்று அமித் ஷா கிண்டல் செய்திருந்தார். அமித்ஷாவின் இந்தக் கிண்டலுக்கு காங்கிரஸ் கட்சி கூட உடனடியாக எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை. மாறாக, காங்கிரஸ் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி பதிலடி கொடுத்திருக்கிறது.

 

அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா அமித் ஷாவையும் மோடியையும் ஒ.டி.ஒ.எம்.ஓ.எஸ். என்று கிண்டல் செய்திருக்கிறார். சுருக்கமாக ஓடோமாஸ் என்று அமித்ஷாவை கேலி செய்திருக்கிறார். ஓடோமாஸ் என்றால் ODOMOS - Overdose of only Modi Only sha என்று கிண்டல் செய்திருக்கிறார்.

அதாவது, அளவுக்கு அதிகமான மோடி ஷா என்று ஒமர் கிண்டல் செய்திருக்கிறார். பாஜகவில் மோடியும் அமித் ஷாவும் அளவுக்கு அதிகமாக முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள் என்ற ரீதியில் ஒமர் கிண்டல் செய்திருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

1,750 ஏக்கரில் மாருதியின் மெகா பேக்டரி ரெடி! வருடம் 10 லட்சம் கார்கள் தயாரிப்பு.. எந்த மாநிலம் தெரியுமா?
2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு