
107 வயது பாட்டி தனது பிறந்த நாள் ஆசையாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பார்க்க வேண்டும். அவர் ‘ஹேண்ட்ஸம்’ ஆக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இந்த டுவிட்டை பார்த்த ராகுல் காந்தி பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியதோடு மட்டுமல்லாமல், தொலைபேசியில் அழைத்தும் பேசியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
107வயது பாட்டி
பெங்களூரைச் சேர்ந்த தீபாலி சிகந்த் என்பவரின் பாட்டிக்கு கிறிஸ்துமஸ் அன்று 107-வயது பிறந்தநாளாகும். இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பதிவிட்டு அவர் டுவிட் செய்து இருந்தார்.
ராகுல் ‘ஹேண்ட்ஸம்’
அதில், “ கிறிஸ்துமஸ் பண்டிகையான இன்று எனது பாட்டிக்கு 107-வது பிறந்தநாள். அவரிடம் உங்களின் ஆசை என்ன என்று நான் கேட்டபோது, ராகுல் காந்தியை பார்க்க வேண்டும் என்றார். ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்? எனக் கேட்டபோது, அவர் ‘ஹேண்ட்ஸம்’ ஆக இருக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.
ராகுல் பதில்
இந்த டுவிட் பதிவிட்டு சில மணிநேரங்களில் இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திடுவிட்டர் பதில் அளித்தார்.
அவர் கூறியுள்ளதாவது- “ அன்புள்ள தீபாலி, உங்களின் அழகான பாட்டிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். நான் ஆரத்தழுவி எனது அன்பை தெரிவித்தேன் என்று கூறுங்கள்’’ என அவர் பதிவிட்டார்.
தொலைபேசியில் பேசினார்
அதுமட்டுமல்லாமல் நேற்று முன் தினம் மாலை தீபாலியின் பாட்டிக்கு தொலைபேசி அழைப்புச் செய்தராகுல் காந்தி அவரிடம் பேசி, தனது வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவித்துள்ளார். இதை தீபாலி தனதுடுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ ராகுல் காந்தி எனது பாட்டிக்கு தொலைபேசி அழைப்புச் செய்து பேசி வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவித்தார். இதுதான் உண்மையில் மனிதநேயம். என் பாட்டியை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.