புல்வாமா தாக்குதல்... மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை போட்டுத்தள்ளிய ராணுவம்..!

By vinoth kumarFirst Published Feb 18, 2019, 12:19 PM IST
Highlights

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அமைப்பின் முக்கிய தலைவர் அப்துல் ரஷித் காஜியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அமைப்பின் முக்கிய தலைவர் அப்துல் ரஷித் காஜியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதியன்று ராணுவ சிஆர்சிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்சிஎஃப் வீரர்கள் 49 வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, இராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரஷித் காஜியை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினர். மேலும் அவர் புல்வாமா பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து புல்வாமா மாவட்டம் பிங்லான் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமணம் அடைந்தனர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட கம்ரான் மற்றும் அப்துல் ரஷித் காஜி என்பது தெரியவந்துள்ளது. தீவிரவாதிகள் உடல்கள் மீட்கப்பட்டு, உயிரிழந்தது ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் முக்கிய காமாண்டோக்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

click me!