வீட்டில் ‘டாய்லெட்’ இல்லைன்னா... ரேஷன் பொருட்கள் ‘கட்’ - புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு

 
Published : Aug 09, 2017, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
வீட்டில் ‘டாய்லெட்’ இல்லைன்னா... ரேஷன் பொருட்கள் ‘கட்’ - புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு

சுருக்கம்

Puducherry governments local secretary Jawahar announced that there will be no ration supplies if there is no toilet in the house.

வீடுகளில் கழிப்பறை இல்லாவிட்டால், ரேஷன் பொருட்கள் கிடைக்காது என புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறை செயலர் ஜவஹர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கழிப்பறை கட்ட வசதியில்லாத புதுச்சேரி மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொள்ள ரூ.20 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது. இந்த நிதிதான் நாட்டில் வழங்கப்படும் நிதிகளிலேயே அதிகமானது.

இந்த நிதியை பெற்ற பயனாளிகள் முறையாக பயன்படுத்தாததால், அகில இந்திய அளவில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மையான நகரங்களின் தர வரிசைகுறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், புதுச்சேரி நகராட்சி 189வது இடத்திலும், உழவர்கரை நகராட்சி 206வது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறது.

இதனால், புதுச்சேரி அரசின் கழிப்பறை கட்டும் நிதியை பெற்றவர்கள், வரும் 20ம் தேதிக்குள் கழிப்பறைகளை கட்ட வேண்டும்.இல்லாவிட்டால், அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும் என  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கழிப்பறைகளை கட்டி முடிக்காவிட்டால், கட்டி முடிக்கப்படும் வரை அவர்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருள்கள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும்.

கழிப்பறைகளைக் கட்டி முடித்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குத் தகுதியுடமை இருப்பின், அரசின் வீடு கட்டும் திட்டத்தில் அவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அநியாயம்! தட்டிக்கேட்ட பெண்ணை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பொசுக்கிய கொடூரர்கள்!
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்