உஷார் !! காரைக்காலில் பரவும் காலரா.. இதுவரை 100 பேர் பாதிப்பு.. 2 பேர் உயிரிழப்பு.. 144 தடை உத்தரவு அமல்

By Thanalakshmi VFirst Published Jul 3, 2022, 6:15 PM IST
Highlights

காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக்கூடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டுள்ளார். மேலும் காலரா பாதித்தோருக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
 

காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக்கூடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டுள்ளார். மேலும் காலரா பாதித்தோருக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம்‌ காரைக்கால்‌ மாவட்டத்தில்‌ ஏராளமானோர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஆய்வு நடத்திய மருத்துவக்குழுவினர், இதுவரை 1000-க்கும்‌ மேற்பட்டோர்‌ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தகவல்‌ வெளியானது. மேலும் காரைக்கால்‌ மாவட்டத்தில்‌ பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர்‌ மாதிரிகள்‌ சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:அதிர்ச்சி !! முகப்பருவை நீக்க முகத்தில் ஊசியால் குத்திய ஆசிரியர்..முகம் வீங்கி துடிதுடித்து உயிரிழந்த மாணவன்

இதனை தொடர்ந்து காரைக்கால் பகுதியில் சிலருக்கு காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்‌, காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்றாடம் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சுகாதாரத்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  சுகாதார மற்றும்‌ குடும்ப நலத்துறை இயக்குநரகம்‌ காரைக்கால்‌ மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.

புதுச்சேரியைச்‌ சேர்ந்த சுகாதாரக்‌ குழுவின்‌ ஒருங்கிணைப்புடனும்‌, நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின்‌ ஒருங்கிணைப்புடனும்‌ அனைத்து மறுசீரமைப்பு மற்றும்‌ மேலாண்மை நடவடிக்கைகளும்‌ மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில்‌, மக்கள்‌ பீதியடைய வேண்டாம்‌ என புதுச்சேரி துணைநிலை ஆளுநர்‌ தமிழிசை செளந்தரராஜன்‌ தெரிவித்துள்ளார்‌.
அதாவது, காலரா பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு வார்டுகள்‌ அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:உஷார் மக்களே !! தொடர்ந்து 5 நாள் கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை..

மக்கள் அனைவரும் கொதிக்க வைத்த குடிநீரை குடிக்க வேண்டும். மேலும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். அதே போல், நன்கு கழுவி சுத்தமான முறையில் சமைத்த உணவை தான் உட்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் கண்டிப்பாக சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக்கூடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டுள்ளார். 

click me!