கோவிலில் வேலை செய்பவர்களுக்கு… ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த.. பிரதமர் ‘மோடி’...!!

By Raghupati RFirst Published Jan 10, 2022, 11:51 AM IST
Highlights

காசி விஸ்வநாதர் கோவிலில்  பணிபுரிபவர்களுக்கு 100 ஜோடி சணல் பாதணிகளை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார்.

உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதன் ஆலயத்திற்கு கடந்த மாதம் வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. புன்னிய நதியான காசி நதியில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அவர் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினார். இதனையடுத்து காசி விஸ்வநாதர் ஆலய வளாக கட்டட பணியில் ஈடுபட்ட பணியாளளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூ தூவி மரியாதை செலுத்தினார். காசி விஸ்வநாதர் ஆலய வளாக கட்டட பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அவர்களுடன் சேர்ந்து மதிய உணவும் சாப்பிட்டார்.

தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்த வைத்தார். பிரதமர் மோடி  காசி விஸ்வநாதர் கோவில் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அதுமட்டுமின்றி, வாரணாசியில் உள்ள அனைத்து பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறார். குறிப்பாக தனது தொகுதி என்பதாலும் தான்.

கோயில் வளாகத்தில் தோல் அல்லது ரப்பரால் செய்யப்பட்ட பாதணிகளை அணிவது தடைசெய்யப்பட்டுள்ளதால், காசி விஸ்வநாத் தாமில் பணிபுரியும் பெரும்பாலானோர் தங்கள் வேலைகளை வெறும் காலுடன் செய்வதை அவர் சமீபத்தில் பிரதமர் சமீபத்தில் அறிந்தார்.  இவர்களில் பூசாரிகள், சேவை செய்பவர்கள், பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் அடங்குவர்கள்.

பிரதமர் மோடி,  உடனடியாக 100 ஜோடி சணல் பாதணிகளை வாங்கி காசி விஸ்வநாத் தாமுக்கு அனுப்பினார், இதனால் தங்கள் கடமைகளைச் செய்பவர்கள் குளிர்ந்த குளிரில் வெறும் காலுடன் இருக்க வேண்டியதில்லை. காசி விஸ்வநாத் தாமில் பணிபுரிபவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பிரதமரின் ஏழைகள் மீதான அக்கறைக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என்று கூறுகிறார்கள்  காசி விஸ்வநாதர் கோவிலில் பணி செய்வபவர்கள்.

click me!