உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வரும் செலவை அரசு ஏற்கும்... அறிவித்தார் புதுவை முதல்வர்!!

By Narendran SFirst Published Feb 27, 2022, 5:10 PM IST
Highlights

உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள் மீட்கும் பணி மத்திய அரசு உதவியுடன் நடைபெற்று வருவதாகவும், மாணவர்களை மீட்டு மீண்டும் புதுச்சேரி அழைத்து வரும் செலவை புதுச்சேரி அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  

உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள் மீட்கும் பணி மத்திய அரசு உதவியுடன் நடைபெற்று வருவதாகவும், மாணவர்களை மீட்டு மீண்டும் புதுச்சேரி அழைத்து வரும் செலவை புதுச்சேரி அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியது முதல் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்த இராணுவ நடவடிக்கை தொடர்ந்து இன்று 4வது நாட்களாக  ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது.

இன்று பெலாரஸில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தையை பெலாரஸில் இல்லை என்றும் உக்ரைன் மீது படையெடுக்க பெலாரஸ் இடம் கொடுத்ததால் அங்கு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என கூறினார். மேலும், போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட் என இந்த நகரங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

இதனிடையே உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீண்டும் புதுச்சேரி அழைத்து வருவதற்கான செலவை அரசே ஏற்கும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள் மீட்கும் பணி மத்திய அரசு உதவியுடன் நடைபெற்று வருவதாகவும், மாணவர்களை மீட்டு மீண்டும் புதுச்சேரி அழைத்து வரும் செலவை புதுச்சேரி அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். ஏற்கனவே தமிழக அரசும் மத்திய அரசும் மாணவர்களை மீட்கும் செலவை ஏற்றுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியும் ஏற்றுள்ளது. 

click me!