பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா எப்போதுமே உங்களுக்கு துணைநிற்கும்! ஃப்ரான்ஸ் அதிபரிடம் வாக்கு கொடுத்த பிரதமர் மோடி

By karthikeyan VFirst Published Dec 7, 2020, 10:55 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரானுடன் இன்று பேசினார். 

பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரானுடன் இன்று பேசினார். ஃப்ரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வருத்தத்தை தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவின் ஆதரவு எப்போதுமே ஃப்ரான்ஸுக்கு இருக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மேலும் இந்தியா மற்றும் ஃப்ரான்ஸுக்கு இடையேயான உறவு, சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளின் பரஸ்பர ஆர்வம், கொரோனா தடுப்பு மருந்து அனைவருக்கு கிடைக்க செய்தல், குறைவான விலையில் தடுப்பு மருந்தை வழங்குவது, கொரோனாவிற்கு பிந்தைய பொருளாதார மீட்டெடுப்பு, இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, கடல்வழி பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியும் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேலும் பேசிக்கொண்டனர்.

இந்தியா-ஃப்ரான்ஸ் இடையே கடந்த பல ஆண்டுகளாக இருந்துவரும் வலுவான உறவு குறித்த திருப்தியை வெளிப்படுத்திக்கொண்ட தலைவர்கள், கொரோனாவிற்கு பிறகான காலக்கட்டத்தில் இருநாடுகளும் பல்வேறு விவகாரங்களில் மேலும் இணைந்து செயல்படுவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

Spoke with my friend on the challenges and opportunities presented by the post-COVID world. India stands by France in its fight against terrorism & extremism. The India-France partnership is a force for good in the world, including in the Indo-Pacific.

— Narendra Modi (@narendramodi)

கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட பிறகு ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் இந்தியாவிற்கு வரவேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார்.
 

click me!