
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரகாசமான மற்றும் ஒன்றுபட்ட எதிர்காலத்திற்காக 11 தீர்மானங்களை முன்வைத்தார். சனிக்கிழமையன்று, நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, 11 தீர்மானங்களைப் பட்டியலிட்டார். சமகால சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைபிடிப்பதில் நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் முன்மொழிந்துள்ள தீர்மானங்கள், “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியதாகவும் ஒற்றுமை, ஒருமைப்பாடு, முன்னேற்றம் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டதாகவும் உள்ளன. ஊழலுக்கு எதிர்ப்பு, வாரிசு அரசியலை முடிவுக்குக் கொண்டுவருதல், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், அடிமைத்தன மனநிலையின் எச்சங்களை ஒழித்தல் ஆகியவை குறித்த முக்கிய தீர்மானங்களும் இதில் அடங்கும்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீடுகள் பாதுகாக்கப்படும், ஆனால் அது மத அடிப்படையில் இருக்காது என்பது உறுதிசெய்யப்படும் என பிரதமர் கூறினார். மேலும், இது அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளில் வேரூன்றிய நிலைப்பாடு எனவும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கான 11 தீர்மானங்கள்:
காங்கிரஸ் மீது கடும் தாக்கு:
காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்தாகவும், அதிகாரத்தை ருசித்த அக்கட்சியின் தலைமை அரசியல் சாசனத்தின் கொள்கைகளுக்கு ஊறு விளைக்கும் செயல்களைச் செய்ததாகவும் மோடி குற்றம் சாட்டினார். இதற்கு நேர்மாறாக, 2014 முதல் தனது அரசாங்கத்தின் கொள்கைகள் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் தொலைநோக்குக்கு ஏற்ப நாட்டை முன்னேற்றுவதிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சொல்லிக்கொண்டார்.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அரசியலமைப்பு சாசனத்தின் நகலை ஒரு யானையின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, அதன் அருகில் தான் வெறுங்காலுடன் நடந்து சென்றார். இதன் மூலம் நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.