
பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில், உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும், வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வந்தே பாரத் ரயில் என்பது உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும், இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாகவும், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டியாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் தானியங்கி கதவுகள், பயோ-வெற்றிட கழிப்பறைகள் மற்றும் வைஃபை போன்ற அம்சங்களும் உள்ளன.
5 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடிசைத்து துவக்கி வைத்தார்!
வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில் சேவையை அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து வருகிறார்.
அந்தவகையில், கேரள தலைநகர் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அம்மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்து பயணம் செய்தார். அந்த ரயிலில் பிரதமருடன் பள்ளி மாணவ, மாணவிகள் பயணித்தனர். அப்போது, மாணவி ஒருவர், இஞ்சக்காடு பாலச்சந்திரனின் ‘இனி வருன்னொரு தாழமுறக்கு’ என்ற மலையாள பாடலை பாடினார். அது பிரதமரின் கவனத்தை ஈர்த்தது. மாணவியின் பாடலை பிரதமர் மோடி ரசித்து கேட்டார். தொடர்ந்து, அந்த மாணவியை ‘நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்கள்’ என பிரதமர் மோடி பாராட்டினார்.
வந்தே பாரத் ரயிலில் கேரள மாணவியின் மலையாள பாட்டை பிரதமர் மோடி ரசித்து கேட்ட அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் ஒரு மறக்கமுடியாத உரையாடல் என பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ரயிலில் பயணித்த மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியதும், மலையாளக் கவிதையை வாசித்த சிறுமியைப் பாராட்டியதும் பிராந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்துவதை குறிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.