இன்று இரவு 12 மணிக்கு மேல் அதிர்ச்சி... பொறி வைத்து காத்திருக்கும் போலீஸ்... உஷார் மக்களே..!

Published : Aug 31, 2019, 03:25 PM ISTUpdated : Aug 31, 2019, 03:26 PM IST
இன்று இரவு 12 மணிக்கு  மேல் அதிர்ச்சி... பொறி வைத்து காத்திருக்கும் போலீஸ்... உஷார் மக்களே..!

சுருக்கம்

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய 2019 மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதா நாடு முழுவதும் அமல் படுத்தப்படுகிறது.  

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய 2019 மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதா நாடு முழுவதும் அமல் படுத்தப்படுகிறது.  

மோட்டார் வாகன மசோதா 2019 மசோதாவை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், புதிய சட்டப்படி போக்குவரத்து விதிகள் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதால், அதனை கட்டுப்படுத்தவும், உயிர் இழப்பை தடுக்கவும் பழைய சட்டத்தில் சில முக்கிய திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் காலவதியாகி ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.  

தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விபத்தில் மரணமடையும் வாகன உரிமையாளரோ அல்லது காப்பீடுதாரரோ ரூ.5 லட்சம் இழப்பீடு தர வேண்டும். வாகன விபத்தில் படுகாயம் அடைபவர் ரூ.2.5 லட்சம் இழப்பீடும் பெறுவார். போக்குவரத்து விதிகளை மீறிய அபராதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் ரூ.100, அது திருத்தப்பட்ட மசோதாவின் படி ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5,000. காப்பீட்டு நகல் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அபராதம். அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும். மசோதாவின் படி, அதிக வேகத்தில் ரூ.1,000 முதல் ரூ .2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

 

வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவனது பாதுகாவலனும் வாகனத்தின் உரிமையாளரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். அப்படி செய்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும்.

வாகனங்களில் அதிக அளவில் சுமை கொண்டு சென்றல் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கலாம். ஓட்டுநர் உரிம நிபந்தனைகளை மீறியதற்காக ரைடு-ஹெயிலிங் திரட்டிகளுக்கு ரூ.1 லட்சம் அபாரதம். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை விதிக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!