எதிர்கட்சியினர் தொடர் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
எதிர்கட்சியினர் தொடர் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

சுருக்கம்

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்கட்சியினர் ரூபாய் நோட்டு நோட்டு விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பி வருகின்றனர்.

அதன்படி, இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் அவை இன்று மீண்டும் கூடியது. மக்களவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் அவைக்கு வரவேண்டும் என கோஷமிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சியினர் எழுந்து நின்று விவாதித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

மேலும், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர் என கூறியதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

இனி பெட்ரோல் விலை உயர்வு பற்றி கவலை இல்லை.! அரபு நாடுகளுக்கு ஆப்பு வைத்த இந்தியா.! பெட்ரோலுக்கு புது மாற்று வந்தாச்சு.!
தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்.. இனி 15 நிமிடம் கூடுதலா வேலை பார்த்தாலும் இரட்டை சம்பளம்..!