தமிழக விமானி அபிநந்தனுக்கு உடனடியாக சிகிச்சை! டீ கொடுத்து கவனித்துக்கொள்ளும் பாகிஸ்தான்! வெளியானது புதிய வீடியோ!

By manimegalai aFirst Published Feb 27, 2019, 6:22 PM IST
Highlights

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல்  நடத்தியதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய  எல்லைக்குள்  எல்லைக்குள் நுழைந்த எப்-16 ரக விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்ததால் பதிலடி கொடுக்க முடியாமல் திரும்பிச் சென்றது.  
 
இந்த சமயத்தில் இந்திய விமானப்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிநந்தன் திரும்ப வராததை இந்திய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவர் இருப்பதுபோல வீடியோவும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் அபிநந்தனை பாக்கிஸ்தான் ஆர்மி அடித்து, தரதரவென இழுத்து செல்வது, அபிநந்தன் ரத்த காயத்துடன், இருப்பது அவரின் கண்களை கட்டி விசாரணை செய்வது போன்ற விடியோக்கள் வெளியாகி வைரலாக பரவியது. பலர் தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் இருந்து மீண்டு வர வேண்டும் என கடவுளிடம் பிராத்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அதிகாரிகள், அபிநந்தனுக்கு மரியாதை கொடுத்து, அவருக்கு உரிய சிகிச்சை கொடுத்து, டீ கொடுத்து கவனித்து, சகஜமாக சில கேள்விகளை கேட்டவாறு ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ இதோ:

"

click me!