ராஜ்ய சபா சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் எதிர்க்கட்சிகள்!

By SG Balan  |  First Published Dec 9, 2024, 5:46 PM IST

மாநிலங்களவை சபாநாயகரும், துணை குடியிரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளன.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 67(பி) பிரிவின் கீழ் மாநிலங்களவை சபாநாயகரும், துணை குடியிரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளன.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 70 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். ராஜ்யசபாவில் தன்கரின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியின் வெளிப்பாடாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி கட்சி மற்றும் பிற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாநிலங்களவையில் ஜெக்தீப் தன்கர் ஆளும் உறுப்பினர்களுக்கு பக்கச்சார்புடன் இருப்பதாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்றனர். அடிக்கடி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், முக்கியமான விஷயங்களில் போதுமான விவாதத்தை அனுமதிக்க மறுப்பதாகவும், சர்ச்சைக்குரிய விவாதங்களின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ELSS Funds: மாசம் ரூ.10,000 முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம்!

ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ​​ராஜ்யசபாவில் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கான இடமும் நேரமும் குறைந்து வருவது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சுக்களுக்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவதும், பல சந்தர்ப்பங்களில் அவர் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது என்றும் புகார் கூறப்படுகிறது.

ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தங்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்ததாகவும், அவை நாடாளுமன்ற விதிகளை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ராஜ்யசபாவின் 238(2) விதி, உறுப்பினர்கள் பேசும்போது மற்ற உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூறுவதை தடைசெய்கிறது. இந்த விதி ராஜ்யசபா தலைவருக்கும் பொருந்தும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Cash Withdrawal Rules: வங்கிக் கணக்கில் இருந்து பெரிய தொகையை எடுப்பது எப்படி?

click me!