கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் ஒரே வளர்ச்சி தாடி... மோடியை பங்கம் செய்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்..!

Published : Sep 16, 2020, 06:59 PM ISTUpdated : Sep 16, 2020, 07:02 PM IST
கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் ஒரே வளர்ச்சி தாடி... மோடியை பங்கம் செய்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்..!

சுருக்கம்

பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் இருந்த இந்த கிராபிக்ஸ் புகைப்படம், படம் வெளியான சில நொடிகளே சமூக ஊடகங்களில் வைரலானது. தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில் கடந்த ஆறு ஆண்டுகள் நாட்டில் காணப்பட்ட ஒரே வளர்ச்சி கேள்விகள் மற்றும் பதில்களுக்கு அஞ்சும் வகையில் நாட்டின் தலைமை உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் ஒரே வளர்ச்சி தாடி என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் கிண்டல் செய்துள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு இன்று காலை பெறப்பட்ட படம் அர்த்தமுள்ள வகையில் படம் வரையப்பட்டுள்ளது என்ற தலைப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் இருந்த இந்த கிராபிக்ஸ் புகைப்படம், படம் வெளியான சில நொடிகளே சமூக ஊடகங்களில் வைரலானது. தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில் கடந்த ஆறு ஆண்டுகள் நாட்டில் காணப்பட்ட ஒரே வளர்ச்சி கேள்விகள் மற்றும் பதில்களுக்கு அஞ்சும் வகையில் நாட்டின் தலைமை உள்ளது.

 பிரதமர் மோடி தனது ஆறு ஆண்டு காலத்தில் இந்தியாவில் எந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தவில்லை ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட நேர்காணல்களை மட்டுமே வழங்கி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!