கல்லூரி செல்லும் வரை இலவச கல்வி... அரசு அதிரடி அறிவிப்பு!

By vinoth kumarFirst Published Sep 5, 2018, 3:50 PM IST
Highlights

அரசு கல்வி நிறுவனங்களில் ஆரம்ப கல்வி முதல் கல்லூரி சென்று பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவர்களுககு இலவசமாக கல்வி வழங்க உள்ளதாக உத்தர பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

அரசு கல்வி நிறுவனங்களில் ஆரம்ப கல்வி முதல் கல்லூரி சென்று பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவர்களுககு இலவசமாக கல்வி வழங்க உள்ளதாக உத்தர பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். மகாத்மா ஜோதிபா ப்யூல் ரோகில்காந்த் பல்கலை பட்டமளிப்பு விழா நடந்தது.

 

 இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, துணை முதல்வர் தினேஷ் சர்மா, வரும் கல்வியாண்டு முதல் முக்கிய நகரங்களில் ஆரம்ப கல்வி முதல் கல்லூரி சென்று பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க திட்டமிட்டுள்ளோம். உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேர்வுகளை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதேபோல், மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணை இந்த மாதம் வெளியிடப்படும். திட்டமிட்ட நாட்களுக்குள் சில பாடங்களை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். 

ஜிஎஸ்டி தொடர்பான படிப்புகளை அடுத்த ஆண்டு முதல் கொண்டு வர உள்ளோம். ஜிஎஸ்டி படிப்பு முறையால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என கூறினார். ஜிஎஸ்டி படிப்பு முறையால் கல்வி தரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்பு பெருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

click me!