Odisha Elections : ஒடிசாவிலும் பாஜகவிற்கு வெற்றி முகம்.. BJD நிலை என்ன? கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

By Ansgar R  |  First Published Jun 1, 2024, 11:12 PM IST

Loksabha Elections Exit Poll Survey : 21 தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி தொடங்கி நான்கு கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.


இந்தியாவில் உள்ள 500க்கும் அதிகமான தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி இன்று ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஏழு கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த சூழலில் தற்பொழுது வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பிரதமர் மோடி தலைமையிலான NDA கூட்டணி பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

இந்நிலையில் கடந்த மே 13ஆம் தேதி தொடங்கி மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய நான்கு தினங்களில், நான்கு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒடிசாவில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் "டுடே ஆக்சிஸ் மை இந்தியா" வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவுகள் இப்பொது வெளியாகியுள்ளது.

Latest Videos

undefined

கேரளாவில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பாஜக.. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி நிலை என்ன தெரியுமா?

அதன்படி 21 தொகுதிகள் கொண்ட ஒடிசா மக்களவை தேர்தலில், பாஜக 15 இடங்களை பிடித்து வெற்றி பெறும் என்றும், நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சிக்கு 3 முதல் 8 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், காங்கிரசுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தேர்தலுக்கு பிந்தைய தன்னுடைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். 

அதே போல ஜான் கி பாத் கருத்துக்கணிப்பின்படி, மோடியின் பாஜகவிற்கு 15 முதல் 18 இடங்களும், பிஜேடி கட்சிக்கு ஒடிசாவில் 7 முதல் 3 இடங்களும், INDIA கூட்டணிக்கு பூஜ்ஜிய இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளது.

அதே நேரம் இந்தியா நியூஸ்-டி-டைனமிக்ஸ் கருத்துக்கணிப்பின்படி பாஜகவுக்கு 13 இடங்களும், பிஜேடிக்கு 8 இடங்களும், INDIA கூட்டணிக்கு எந்த இடங்களும் இல்லை என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துப்படி, பாஜக 15 முதல் 17 இடங்களையும், பிஜேடி 4 முதல் 6 இடங்களையும், இந்திய கூட்டணிக்கு ஒடிசாவில் 1 இடமும் பிடிக்கும் என கூறியுள்ளது. 

3வது முறை மீண்டும் மோடி.. அடித்து கூறும் கருத்துக்கணிப்பு முடிவுகள்.. காங்கிரஸ் சொதப்பியது எங்கே?

click me!