நாட்டை இருளில் தள்ளிய மத்திய அரசு… ரூ.6000 கோடி டெண்டரை அதானி நிறுவனத்திற்கு வழங்கியது NTPC!!

Published : Jun 05, 2022, 09:27 PM IST
நாட்டை இருளில் தள்ளிய மத்திய அரசு… ரூ.6000 கோடி டெண்டரை அதானி நிறுவனத்திற்கு வழங்கியது NTPC!!

சுருக்கம்

6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி டெண்டர்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC) வழங்கியுள்ளது. 

6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி டெண்டர்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC) வழங்கியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான (ஜென்கோ) என்டிபிசி (தேசிய அனல்மின் நிறுவனம்) அதானி நிறுவனங்களுக்கு 6,585 கோடி ரூபாய் மதிப்பில் 6.25 மில்லியன் டன்களுக்கு பல நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. உள்நாட்டு நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் 10 சதவீதத்தை கலக்க வேண்டும் என்ற மின்துறை அமைச்சகத்தின் சமீபத்திய உத்தரவை பூர்த்தி செய்ய, அரசுக்கு சொந்தமான ஜென்கோ நிறுவனம் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. மேலும் அந்நிறுவனம் ஆறு வெவ்வேறு டெண்டர்களை வைத்து, அதானி எண்டர்பிரைசஸ் உடன் இணைந்து அகமதாபாத்தைச் சேர்ந்த ஆதி டிரேட்லிங்க், சென்னையைச் சேர்ந்த செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மோஹித் மினரல்ஸ் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப ஏலங்களைப் பெற்றது. மார்ச் மாதத்தில், நிலக்கரி நெருக்கடி வெடித்தபோது, என்டிபிசி 5.75 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஐந்து டெண்டர்களை வழங்கியது, இந்த டெண்டர்களின் மொத்த தொகை ரூ.8,422 கோடி. மேலும் அனைத்து ஒப்பந்தங்களும் அதானி எண்டர்பிரைசஸுக்கு சென்றன.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி இந்தோனேசியாவில் இருந்து வரும் என்றும் என்டிபிசி ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப் போவதில்லை என்றும் நிறுவன நிர்வாகிகள் முன்பே கூறியிருந்தனர். அதானி ஆஸ்திரேலியாவில் கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை ஆண்டுக்கு 10 மெட்ரிக் டன் திறன் கொண்டதாகச் சொந்தமாக வைத்து நடத்தி வருகிறது. என்டிபிசி, அரசு நிர்ணயித்த 10 சதவீத இலக்கை அடைய, கிட்டத்தட்ட 20 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை ஆர்டர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. என்டிபிசி ஆலைகளுக்கு 2.5 மெட்ரிக் டன் நிலக்கரி வந்துள்ளதாகவும், துறைமுகங்களில் 1.6 மெட்ரிக் டன் நிலக்கரி இருப்பதாகவும் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். நிறுவனம் 10 மெட்ரிக் டன்களுக்கு ஆர்டர் செய்துள்ளது, மேலும் 5 மெட்ரிக் டன்களுக்கான ஆர்டரை வழங்க வாரியத்தின் ஒப்புதலுக்கு விரைவில் செல்லும் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். 

தேசிய சுரங்க நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்)-லிருந்து உள்நாட்டு நிலக்கரியை வாங்கும் யூனிட்டுக்கு ரூ.2க்கு எதிராக, நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 7-8 வரை என்டிபிசியின் எரிபொருள் விலை உயரும் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதன் மூலம் என்டிபிசியின் இறுதி மின்கட்டணம் 50-70 பைசா வரை அதிகரிக்கப்படும் என்றும் இது நுகர்வோருக்கு வழங்கப்படும் என்றும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். உலக சந்தையில் நிலக்கரி விலை தற்போது கோல் இந்தியா லிமிடெட் அறிவிக்கப்பட்ட நிலக்கரி விலையை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி என்டிபிசியின் பல நிலையங்களிலும் தல்சர், ஃபராக்கா மற்றும் கஹல்கான் போன்ற நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் உள்ள நிலையங்களிலும் பயன்படுத்தப்படும். நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டு நிலக்கரி கையிருப்பு போதுமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பருவமழை தொடங்கும் முன் நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன் உத்தரவிட்டது. நாட்டில் போதுமான அளவு இருப்பு உள்ளது மற்றும் ஜென்கோ முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இண்டிகோ விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் பயணிகளுக்கு ஆச்சரியம்!
நேரு சொன்னதைத் திரிக்கும் மோடி.. வந்தே மாதரம் விவாதத்தில் பிச்சு உதறிய பிரியங்கா காந்தி!