இனி ஞாயிற்றுகிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது : பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அதிரடி

Asianet News Tamil  
Published : Oct 24, 2016, 11:42 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
இனி ஞாயிற்றுகிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது  : பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அதிரடி

சுருக்கம்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, வரும் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பெட்ரோல் கொள்முதல் நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

பெட்ரோல் சில்லரை விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு, கமிஷன் தொகை உயர்த்தி தராததைக்கண்டித்து, இந்த போராட்டம் நடத்தப்படுவதாக, சேலத்தில் அச்சங்கத்தின் தலைவர் முரளி தெரிவித்தார்.

நவம்பர் 5 ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் வகையில் நேரம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதன் பிறகு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல்.. மைலேஜ் குறையுமா? ஓட்டுநர்கள் கவனத்திற்கு
டெல்லி மதுபான கொள்கை.. அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிப்பு..! கண்ணீர் விட்டு கதறிய முதல்வர்