கொரோனாவுக்கு எதிராக கெத்து காட்டும் கேரளா.. இன்று ஒரு பாதிப்பு கூட இல்ல.. சபாஷ் கேரளா

By karthikeyan VFirst Published May 3, 2020, 8:41 PM IST
Highlights

கேரளாவில் இன்று ஒரு கொரோனா பாதிப்பு கூட உறுதியாகவில்லை என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

இந்தியாவில் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரளாவில்தான். கொரோனா உறுதியான ஆரம்ப கட்டத்தில் மார்ச் மாத மத்தியிலிருந்து இறுதி வரை கேரளாவில் பாதிப்பு மளமளவென உயர்ந்தது. மகாராஷ்டிராவுக்கு நிகராக கேரளாவில் பாதிப்பு இருந்தது. 

ஆனால் கேரள அரசின் சிறப்பான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள், சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து கேரளாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்தது.

அங்கு இதுவரை 499 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 95 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு முதலில் உறுதியான கேரளா, வெகுவிரைவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி மீண்டது. மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கேரளாவில் இன்று ஒரு கொரோனா பாதிப்பு கூட உறுதி செய்யப்படவில்லை என கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார். இதேபோலவே இரு தினங்களுக்கு முன்பும் கூட ஒரு பாதிப்பு கூட உறுதியாகவில்லை எனவும் அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார். 

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவரும் நிலையில், கேரளா கொரோனாவிலிருந்து கிட்டத்தட்ட மீண்டு, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டது. 
 

click me!