மருத்துவமனையில் நோயாளிகள் தங்கும் அறைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை… ஓட்டலில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வாடகைக்கு வரி கிடையாது

First Published Aug 29, 2017, 8:28 PM IST
Highlights
No gst to hospital bed rooms

மருத்துவமனையில் நோயாளிகள் தங்கும் அறைக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை… ஓட்டலில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வாடகைக்கு வரி கிடையாது

மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கும் அறைகளுக்கு செலுத்தப்படும் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

இதன்படி நோயாளிகள் மருத்துவமனைகளில் தங்கி இருந்தால், அந்த அறைக்கு ஏற்ற கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும், ஜி.எஸ்.டி. வரி செலுத்த தேவையில்லை.

இது குறித்து மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறை வாரியம் நேற்று அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது-

மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கி இருக்கும் அறைக்கு அதற்குரிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. அந்த அறைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், வரி செலுத்த தேவையில்லை.

அதே சமயம், ஓட்டல், விருந்தினர் இல்லம் உள்ளிட்டவற்றில் செலுத்தப்படும் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்ட அளவை மட்டும் செலுத்தினால் போதுமானது. அதேசமயம், ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வாடகையில் எடுக்கும் அறைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்த தேவையில்லை.

நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாகவும், ரூ.2,500க்கு குறைவான வாடகையில் எடுக்கப்படும் அறைகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரியும், ரூ.2500 முதல் ரூ.7500 வரை வாடகையில் எடுக்கப்படும் அறைகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், நாள் ஒன்றுக்கு ரூ.7,500க்கு அதிகமான வாடகையில் எடுக்கப்படும் அறைகளுக்கு 28சதவீதம் ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்படும். இந்த வரி என்பது கூடுதலாக படுக்கை ஒதுக்கினாலும் அந்த கட்டணமும் இதில் அடங்கும்.

காம்போசிஷன் வரி செலுத்தும் திட்டத்தின் அடிப்படையில், உணவு மற்றும் குளிர்பானங்கள் ஒரு பேக்கரியில் இருந்துசப்ளை செய்யப்படும் பட்சத்தில் அதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.

பொழுதுபோக்கு பூங்காக்கள், தீம் பார்க், நீர்விளையாட்டுகள் உள்ள பூங்கா, சூதாட்ட கிளப்புகள், குதிரைப்பந்தயம், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


 

tags
click me!