
ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சங்கம் லால் பாண்டே, விவேக் நாராயணன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை முற்றிலும் கட்டுப்படுத்தி, ஒழிக்கும் வகையில், மத்திய அரசு தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.1000, மற்றும் ரூ.500 நோட்டுகளை செல்லாது என நேற்று முன் தினம் அறிவித்தது. இந்த ரூபாய்களை வைத்திருக்கும் பொதுமக்கள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூ. 500, ரூ.2000 நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தது.
இந்த உத்தரவால் மக்களின் பணப்பரிவர்த்தனைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சாமானிய மக்கள், நடுத்தரமக்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் அல்லல்பட்டு வருகின்றனர். நடுத்தர வர்க்கத்து மக்கள் கையில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி செலவு ெசய்ய முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்தநிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சங்கம் லால் பாண்டே, விவேக் நாராயணன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு தன்னிச்சையாக அறிவித்துவிட்டது. இந்த உத்தரவால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி, வருகின்றனர். டிசம்பர் இறுதிவரை பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் என்பது, பண்டிகைகள், திருமணம் நடக்கும் மாதம். அப்போது இதுபோல் சவுகரியக்குறை இருந்தால், மக்கள் பெரும் பாதிப்படைவார்கள். ஆதலால்,மத்தியஅரசு அவசரகதியில் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.மக்களின் பாதிப்பைக் கருதி இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ரூ.500, ரூ1000 நோட்டை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது என்பது அரசின் கொள்கை முடிவு இதில், நீதிமன்றம் தலையிட முடியாது. ஆதலால், மனு தாரர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுஅரசின்அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது. அந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். அதேசமயம், இந்த அறிவிப்பால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை சரிசெய்ய மத்திய அரசு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தது. நடவடிக்கைகள் எடுத்து வருகிறது . இதில் மத்திய அரசு பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 25-ந்தேதி ஒத்திவைத்தனர்.