நித்யானந்தா உருவாக்கிய கைலாசா நாடு... பாஸ்போர்ட், தனிக்கொடி அறிமுகம்.. பிரதமராக நித்யானந்தா அறிவித்து அதகளம்?

By manimegalai aFirst Published Dec 4, 2019, 7:09 AM IST
Highlights

உலகம் முழுவதும் உள்ள சிஷ்யர்களின் உதவியைக் கொண்டு இந்த நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நித்யானந்தா, ‘கைலாசா’ என்ற பெயரில் அந்த நாட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இ ந் நிலையில் இந்த நாட்டுக்காக 'கைலாசா' என்ற பெயரில் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
 
சாமியார் நித்தியானந்தா ஈக்வெடா நாடு அருகே தனி தீவில் ஹிந்துக்களுக்கான தனி நாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியாக புதிய பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 நித்தியானந்தாவிடம் உள்ள இரு குஜராத் இளம் பெண்களை மீட்கும் பணியில் குஜராத் காவல் துறை நித்தியானந்தாவை தேடிவருகிறது. ஆனால், அவரோ போலி பாஸ்போர்ட்டில் இந்தியாவிலிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், நித்தியானந்தாவோ இமயமலை அருகே  தான் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறிவந்தார். நித்தியானந்தா எங்கே இருக்கிறார் எனத் தெரியாத நிலையில், தற்போது தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வெடார் நாடு அருகே தனித் தீவில் புதிய நாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகம் முழுவதும் உள்ள சிஷ்யர்களின் உதவியைக் கொண்டு இந்த நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நித்யானந்தா, ‘கைலாசா’ என்ற பெயரில் அந்த நாட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இ ந் நிலையில் இந்த நாட்டுக்காக 'கைலாசா' என்ற பெயரில் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டுக்கு செல்ல தனி பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றையும் நித்யானந்தா உருவாக்கியுள்ளார். ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோ கைலாசா நாட்டின் குடிமகன் ஆகலாம் எனவும் அந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, கைலாசா நாட்டின் பிரதமராக நித்தியானந்தா இருப்பார் என்றும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!