"பாஜகவை முற்றிலுமாக ஒழிக்க மெகா கூட்டணி அமைக்க வேண்டும்" - நிதிஷ் குமார் யோசனை

 
Published : Apr 04, 2017, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
"பாஜகவை முற்றிலுமாக ஒழிக்க மெகா கூட்டணி அமைக்க வேண்டும்" - நிதிஷ் குமார் யோசனை

சுருக்கம்

nithish kumar idea about defeating bjp

பாஜவை முற்றிலுமாக ஒழிக்க மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் இதை ஒருங்கிணைக்கும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்றும் பீஹார் முதலமைச்சர்  நிதிஷ் குமார்  தெரிவித்தார்.

இத தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அண்மையில் தேர்தல் நடைபெற்ற உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட  மாநிலங்களில், பாஜகவை வீழ்த்த முடியாததற்கு, பீஹாரைப் போல், மெகா கூட்டணி அமையாததே காரணம் என தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணியுடன், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்திருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வை வீழ்த்த எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து  ஒரு மெகா கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்த நிதிஷ் குமார், அதனை ஒருங்கிணைக்கும்  பொறுப்பு, காங்கிரசுக்குத்தான்  உள்ளது என கூறினார்.
இதனிடையே கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எங்கள் கட்சியை வீழ்த்துவதற்காக, பாஜக மேலிடம் மதவாத விதையை விதைத்து, வன்முறையை ஏற்படுத்தி, அரசியல் லாபம் அடைய முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

பாஜகவின் இந்தத் திட்டம் பலிக்காது. என்றும்  பாஜகவை வீழ்த்த அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்குவோம் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"