கர்நாடகாவில் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ...!

 
Published : Oct 31, 2017, 08:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
கர்நாடகாவில் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ...!

சுருக்கம்

Nirmalani NRaju from Jharkhand has been appointed as the first female Chief of Police in Karnataka.

கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் தலைமை காவல்துறை அதிகாரியாக இருந்த ரூபக் குமார் தத்தா இன்று ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய தலைமை காவல்துறை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரூபக் குமார் தத்தாவின் விடைபெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், ரூபக் குமார் தத்தா தனது பொறுப்புகளை நீலாமணி என்.ராஜூவிடம் ஒப்படைத்தார். 

நீலாமணி கடந்த 1983 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு தலைமை பொறுப்பு வழங்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதனை உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உறுதி செய்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலம் ரூர்கியைச் சேர்ந்த நீலாமணி என்.ராஜூ அம்மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்