அடுத்த வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படும்… வதந்தியை நம்பாதீங்க… நிதி அமைச்சகம் விளக்கம் !!

By Selvanayagam PFirst Published Aug 31, 2018, 1:07 PM IST
Highlights

செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைதளங்களில் பரவி வருவது வதந்தி என்றும் வழக்கம் போல் வங்கிகள் செயல்படும் என்றும்  நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் இரண்டாம் தேதி முதல் 5ஆம் தேதி வரையிலும் பிறகு 8  மற்றும் 9ம் தேதி வங்கிகள் செயல்படாது என்று whatsapp செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் அது தவறான தகவல் என்று நிதி அமைச்சகமும்,  வங்கி ஊழியர்கள் சங்கங்களும் தெரிவித்துள்ளன.

செப்டம்பர் 3 ஆம் தேதியன்று திங்கட்கிழமை ஜன்மாஷ்டமி விடுமுறை. அதைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்றும் whatsapp செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Janmastami-க்கு சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை. எனவே அன்றைய தினம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஏடிஎம் சேவைகள் தடை இன்றி செயல்படும் என்று வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

4 மற்றும் 5  ஆகிய தேதிகளில்  ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். எனவே மற்ற வங்கிகளில் அன்றாட பணிகளில் பாதிப்பு இருக்காது என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதேபோல எட்டாம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வழக்கமான விடுமுறை.  எனவே முதல் வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்பது தவறான தகவல் என்று வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை சற்றுமுன் நிதி அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

click me!