இந்த ஜென்மம் மட்டுமல்ல ஏழேழு ஜென்மத்துக்கும் இவ மட்டும் மனைவியா வந்துவிடக் கூடாது…. மரத்தைச்சுற்றி வழிபட்ட  ஆண்கள்!!

 
Published : Jun 28, 2018, 11:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
இந்த ஜென்மம் மட்டுமல்ல ஏழேழு ஜென்மத்துக்கும் இவ மட்டும் மனைவியா வந்துவிடக் கூடாது…. மரத்தைச்சுற்றி வழிபட்ட  ஆண்கள்!!

சுருக்கம்

Next seven generation wedont like this wife gents pray

மும்பையில்  மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், மரத்தை எதிர் திசையில் சுற்றி வந்து ஏழு ஜென்மத்திற்கும் அவர்கள் மீண்டும் மனைவியாக வரக்கூடாது என  மிக உருக்கமாக வேண்டிக்கொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வட மாநிலங்களில் வட் பூர்ணிமா என்ற பண்டிகை மிகவும்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அன்றைய தினம்  திருமணமான பெண்கள் விரதமிருந்து, தங்களது கணவர்கள் நலமுடன் வாழவும், ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே கணவர்களாக வர வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு  கோயிலுக்கு சென்று மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டுவார்கள். 

இதை அடிப்படையாகக் கொண்டு நேற்று மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் நகரில் உள்ள கோயில் ஒன்றில், கணவருக்காக பெண்கள் விரதமிருந்து மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டினர்.

அதே நேரத்தில் மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், அதே மரத்தை எதிர்திசையில் சுற்றி வந்து கயிறு கட்டினர். மேலும் அப்படி சுற்றி வரும் போது, ஏழு ஜென்மத்திற்கும் இவர்களே மனைவியாக வந்துவிடக்கூடாது என  உரக்க சத்தமிட்டபடி வந்தனர்.

இது தொடர்பாக மனைவிகளால் பாதிக்கப்பட்டோருக்கான நலச்சங்கத் தலைவர், சட்டத்தை தவறாக பயன்படுத்தி எங்களது மனைவிகள் தங்களை மோசமாக துன்புறுத்தி வருவதாக தெரிவித்தார்.

மற்றொருவர் எனது மனைவி அளித்த பொய் புகார் காரணமாக எனக்கு 4 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்றார். இதே போன்று எனது உணவையும், எனது பணியையும் நானே செய்து கொள்வதால் எனக்கு மனைவி தேவையில்லை. அவரால் எனது வேலை போய்விட்டது. அவரது முகத்தை பார்ப்பதை விட இறப்பதே மேல் என மற்றொருவர்  தெரிவித்தார்.

தற்போது உள்ள மனைவி தங்களுக்கு வேண்டாம் என கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக ஆண்கள் அந்த மரத்தை எதிர் திசையில் சுற்றி வந்துவழிபட்டனர்.

PREV
click me!

Recommended Stories

நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்
அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு