நாட்டிலேயே முதல்முறையாக ரயில் விபத்து மீட்புப் பணி பயிற்சிக்காக புதிய கிராமம்!!

First Published Aug 13, 2017, 4:57 PM IST
Highlights
new village for railway rescue training


ரெயில்கள் விபத்துக்களில் சிக்கும் போது,ஆற்றில் விழுவது, பெட்டிகளில் தீவிபத்து ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்று. இந்த விபத்துக்களின் போது, மீட்புப்பணியை துரிதப்படுத்துவது, பயிற்சி அளிப்பது ஆகியவற்றுக்காக பெங்களூரு அருகே ‘ரெயில்வே பேரழிவு மேலாண்மை கிராமம்’ உருவாக்கப்பட உள்ளது.

இந்த கிராமம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட உள்ளது. பெங்களூரு அருகே 3.32 சதுர கிலோமீட்டர் இடம் கொண்ட ‘ஹெஜ்ஜலா கிராமம்’ இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு 3500 மக்கள் வாழ்க்கின்றனர். இந்த பயிற்சி நிறுவனத்தை உருவாக்க ரெயில்வே அமைச்சகம் ரூ.44.42 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது.

இது குறித்த ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது-

ரெயில்வே பேரழிவு மேலாண்மை கிராமத்தில் பயன்படுத்துவதற்காக ரெயில்வேதுறையில் பயன்பாடின்றி கிடக்கும் பெட்டிகள் பயன்படுத்தப்படும். ரெயில்வேவிபத்துக்களைப் போலவே உருவாக்கப்பட்டு, அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி மேற்கொள்ள இந்த கிராமம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த வகுப்பு அறைகள், செய்முறை வகுப்புகள் நடத்த இடங்கள், பயிற்சிகள் மேற்கொள்ள தனி இடங்கள், பல்வேறு சூழலில், விபத்துக்கள் நடந்தால் அதை எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும்

இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமே, விபத்தில் சிக்கியவர்களை விரைவாக மீட்டு, மருத்துசிகிச்சைக்கு அனுப்பி வைக்க துரிதமாக செயல்படுதலாகும். இந்த கிராமத்தில் குகைப்பாதை, ரெயில்வே பெட்டிகளை வெட்டி எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு சூழல்கள்  தத்ரூபமாக உருவாக்கப்பட உள்ளன.

நீர்நிலைகளில் விபத்து ஏற்பட்டால்  அங்கு எப்படி மீட்புப்பணி ேமற்கொள்வது, நீருக்கு அடியில் மீட்புப்பணி மேற்கொள்வது குறித்தும் தனி இடம் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கிராமத்தை உருவாக்கும பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்த கிராமம் தயாராகிவிடும் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!