India - Pakistan War: நாடு முழுவதும் மே 7ஆம் தேதி போர் ஒத்திகை: உள்துறை அமைச்சகம் உத்தரவு!!

Published : May 05, 2025, 06:58 PM ISTUpdated : May 05, 2025, 10:29 PM IST
India - Pakistan War: நாடு முழுவதும் மே 7ஆம் தேதி போர் ஒத்திகை: உள்துறை அமைச்சகம் உத்தரவு!!

சுருக்கம்

மே 7 அன்று நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

India - Pakistan War Tension: மே 7ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை நடத்த பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எதிரி நாட்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களைச் சோதித்தல், பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் சுயபாதுகாப்புப் பயிற்சி அளித்தல், மின்வெட்டுக்குத் தயாராக இருத்தல், முக்கிய இடங்களை மறைத்தல் மற்றும் மக்களை வெளியேற்றதல் ஆகியவை இந்த ஒத்திகையில் அடங்கும்.

உள்துறை உத்தரவில் உள்ளது என்ன?

உள்துறை அமைச்சக வட்டாரங்களின் தகவல்கடி, போர் ஒத்திகையின்போது பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

1. வான்வழித் தாக்குதல், எச்சரிக்கை சைரன்கள்

வான்வழித் தாக்குதல் அல்லது ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப் பயன்படுத்தப்படும் சைரன்கள் செயல்பாட்டில் உள்ளனவா, சரியான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளனவா, ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்வது இதில் அடங்கும்.

2. பொதுமக்கள், மாணவர்களுக்குப் பயிற்சி 

குண்டுவெடிப்பு அல்லது ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அவசரகாலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு, குறிப்பாக மாணவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்குப் பயிற்சி அளிப்பது இதில் அடங்கும்.

3. மின்வெட்டு

இரவு நேரத் தாக்குதல்களின் போது எதிரி விமானங்கள் முக்கிய இடங்களை அடையாளம் கண்டு குறிவைப்பதைத் தடுக்க, ஒரு பகுதியில் உள்ள அனைத்து விளக்குகளையும் உடனடியாக அணைப்பதைக் குறிக்கிறது.

4. முக்கிய இடங்களைப் பாதுகாத்தல்

மின் உற்பத்தி நிலையங்கள், இராணுவ கிடங்குகள் மற்றும் தொடர்பு மையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை உருமறைப்பது, வான்வழி அல்லது செயற்கைக்கோள் கண்காணிப்பின் போது எதிரி கண்டறிவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

5. மக்களை வெளியேற்றுதல்

புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஒத்திகை செய்யப்பட்ட வெளியேற்றத் திட்டம், பொதுமக்களையும் அரசு ஊழியர்களையும் உயர் ஆபத்து மண்டலங்களிலிருந்து பாதுகாப்பாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் இடமாற்றம் செய்ய உதவுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!