தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துக்கு ரூ.19ஆயிரத்து 744 கோடி ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துக்கு ரூ.19ஆயிரத்து 744 கோடி ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத எரிசக்தி உற்பத்தி மையாக இந்தியா திகழ வேண்டும் எனும் நோக்கில் இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்குத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இயக்கத்துக்காக ரூ.19,744 கோடி ஒதுக்கப்படும், இதில் ரூ.17,490 கோடி சைட் திட்டத்துக்கும், ரூ.1,466 கோடி பரிசோதனைத் திட்டங்களுக்கும், ரூ.400 கோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், ரூ.388 கோடி பிற பயன்பாட்டுக்கும் ஒதுக்கப்படும்.
பட்ஜெட்டில் உரம், உணவு மானியத்தை ரூ.3.70 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டம்
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய புதிய மற்றும் புதுப்பித்தல் எரிசக்தி துறை வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது, 2030ம் ஆண்டுக்குள் 125 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்குதல்
இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் ரூ.8 லட்சம் கோடி முதலீடு திரட்டப்பட்டு, 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் படிப்படியாக படிமஎரிபொருட்கள் பயன்படுத்துவதைக் குறைத்தல், வெளிநாடுகளில் இருந்து படிமஎரிபொருள் இறக்குமதியை ரூ.ஒரு லட்சம் கோடிக்கு குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் பசுமை இல்லவாயுக்களை 50மில்லியன்மெட்ரிக் டன்னாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் விசாலமான நன்மைகள் நமக்குக் கிடைக்கும், பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும், தொழிற்துறையை கரியமிலவாயு வெளியேற்றவதில் இருந்து குறைக்கலாம், படிமஎரிபொருட்களை மட்டுமே நம்பியிருக்கும் சூழலில் இருந்து மெல்ல மீண்டு வர முடியும். உள்நாட்டிலேயே பசுமை ஹைடரஜன் தயாரிக்கும் வலிமை வரும், வேலைவாய்ப்புப் பெருகும்
இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்