ஏன்டா என்னப்பெத்திங்க? மம்மி டாடியின் மானத்தை கோர்ட்டுக்கு இழுக்கும் தறுதலை..!

By vinoth kumarFirst Published Feb 7, 2019, 5:26 PM IST
Highlights

தனது சம்மதம் இல்லாமல் தன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நீங்கள் இதுவரை பல்வேறு வழக்குகளை கேள்விப்பட்டிருப்பிங்கள், ஆனால் இதுபோல வழக்கு ஒன்றிணை நீதிபதிகளே எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். என்ன வழக்கு என்றால். தனது சம்மதம் இல்லாமல் தன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ரபேல் சாமுவேல்(27). ஒரு உயிர் பிறப்பது என்பது பூமிக்கு தேவையில்லாத பாரத்தை ஏற்படுத்தும் எனக் கூறும் இவர், தனது சம்மதம் இல்லாமல் தன்னை தனது பெற்றோர் பெற்றெடுத்தது குற்றம் என்றும் அதற்காக அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக ரபேல் சாமுவேல் தனது பேஸ்புக் பதிவில் கூறிருப்பதாவது; நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். ஆனால், அவர்கள் தங்களது சுகத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும்தான் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள். யாரோ இருவர் சுகம் அனுபவிப்பதற்காக நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? நான் ஏன் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

அதனால் எனது சம்மதம் இல்லாமல் என்னை பெற்றெடுத்த எனது பெற்றோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். ரபேல் சாமுவேலின் இந்த பேஸ்புக் பதிவு உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அவர சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘இந்த பூமியில் இனப்பெருக்கம் என்பது நாசிசவாதமாகும். ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள், அதற்கு அவர்களது பதில், ‘எங்களுக்கு தேவை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம்’ என்பதாகத்தான் இருக்கும். இந்த உலகத்திற்கு  ஒரு குழந்தையை பிறப்பித்து அறிமுகப்படுத்துவது என்பது மிகப்பெரிய தவறு’’ என்று கூறியுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில் எங்களை நீதிமன்றத்துக்கு இழுக்க போவதாக அறிவித்திருக்கும் எனது மகனின் துணிச்சலை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளனர். 

click me!