மும்பை தாக்குதல் : இன்று எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி

Asianet News Tamil  
Published : Nov 26, 2016, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
மும்பை தாக்குதல் : இன்று எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி

சுருக்கம்

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்‍கப்படுகிறது. இதனையொட்டி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடல் மார்க்கமாக நுழைந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். 2008 நவம்பர் 26-ம் தேதி நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். 

இந்திய பாதுகாப்புப் படையின் சிறப்பு கமாண்டர்கள் பலமணி நேரம் போராடி, இந்த தாக்குதலை முறியடித்து, ஏராளமானோரை பாதுகாப்பாக மீட்டனர். நாடெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Marriage : கணவனுக்கு தாலி கட்டிய மனைவி! இந்த வினோத திருமணத்தின் பின்னணி இதுதான்!
US Bond Yield: இந்திய பங்குச்சந்தைக்கு புது சிக்கல்! பின்னணியில் அமெரிக்க பத்திரங்களா?