
இந்தியாவின் 100 முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10வது வருடம் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2017 என்ற தலைப்பில் போர்ப்ஸ் நாளிதழ் இந்தியாவில் உள்ள 100 முன்னணி பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டது.
இதில், இந்தியாவின் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10வது வருடம் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 3,800 கோடி அமெரிக்க டாலர்.
ஏழு பெண்கள் அடங்கிய இந்த பட்டியலில் 16 வது இடத்தில் சாவித்ரி ஜிண்டால் குடும்பம் உள்ளது.
குப்தா குடும்பம் 40வது இடத்தில் உள்ளது. மேலும், தாய் மற்றும் மகனான வினோத் மற்றும் அனில் ராய் குப்தா குடும்பம் 48 வது இடத்தில் உள்ளது.
இந்து ஜெயின் மகன்களான சமீர் மற்றும் வினீத் குடும்பம் 51 வது இடத்தை பிடித்துள்ளது. உலகின் 3வது மிக பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை டஃபே நிறுவனம் 63 வது இடத்தை பிடித்துள்ளது.
ரெவ்லான் என்ற நிறுவனத்தினை தலைமையேற்று நடத்தி வரும் லீனா திவாரி 71வது இடத்தினை பிடித்துள்ளார். இந்தியாவில் தன் முயற்சியால் முன்னணிக்கு வந்த பெண் என்ற பெருமையை பெற்றுள்ள ஷா 72 வது இடத்தை பிடித்துள்ளார்.