பெண்களுக்கு மாதம் "ஆயிரம் ரூபாய்" திட்டத்தை தொடங்கி வைத்தார் ம.பி முதல்வர் - தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா.?

By Raghupati R  |  First Published Mar 6, 2023, 2:19 PM IST

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் இன்று சவுகான் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


தமிழக சட்டசபைக்கு கடந்த 201ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முக்கிய காரணமே தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான். பெண்களுக்கு மாதம் 1000 முதல் நீட் ஒழிப்பு வரை பல கவர்ச்சியான வாக்குறுதிகள் திமுகவின் வெற்றிக்கு காரணம் என்றே சொல்லலாம்.

Tap to resize

Latest Videos

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்

அண்மையில் முடிந்த ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் இதுபற்றி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவரது 65வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே இந்த திட்டத்திற்காக ரூ. 8,000 கோடி ரூபாயை அம்மாநில அரசு ஒதுக்கி இருந்தது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த நிதிஆண்டில் ஆண்டு வருமான ரூ.2.5 லட்சம் மிகாமல் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வசதி கொண்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் எதிர்வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் மு.க ஸ்டாலின் மார்ச் மாதத்தில் அறிவிக்க உள்ளார். தற்போதைய தகவலின்படி, பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு மட்டும் வழங்கலாமா ? என்ற ஆலோசனையில் தமிழக அமைச்சரவை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க..சிடிஆர் நிர்மல் குமாருக்கு புது "ஆப்பு".. நேற்று ராஜினாமா.! இன்னைக்கு இப்படியா.? அண்ணாமலையின் பக்கா ஸ்கெட்ச்!

இதையும் படிங்க..13 வயது சிறுவனுடன் தகாத உடலுறவு.. குழந்தை பெற்ற 31 வயது பெண்.. கதறும் சிறுவனின் தாய்!!

click me!