ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற அமைச்சர்... ஸ்பாட் ஃபைன் போட்ட போக்குவரத்து போலீசார்..!

By vinoth kumarFirst Published Sep 6, 2019, 6:06 PM IST
Highlights

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற அமைச்சர் போக்குவரத்து போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இதனையடுத்து அபராதம் செலுத்திய பின்பு ரசீது கொடுத்து போலீசார் அனுப்பினர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற அமைச்சர் போக்குவரத்து போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இதனையடுத்து அபராதம் செலுத்திய பின்பு ரசீது கொடுத்து போலீசார் அனுப்பினர்.

ராஜ்தானில், காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் சுரங்கத்துறை அமைச்சராக உள்ளவர் பிரமோத் ஜெயின் பையா. கடந்த 3-ம் தேதி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளின் படி, அவர் ஹெல்மெட் அணியவில்லை. இதனையடுத்து போக்குவரத்து போலீசார் உடனே அவரைத் தடுத்து நிறுத்தினர். 

பின்னர், ஹெல்மெட் அணியாமல் சென்ற காரணத்திற்காக, ரூ.200 அபராதம் விதித்து போக்குவரத்து காவலர் ரசீது அளித்தார். போக்குவரத்து போலீசார் கூறுகையில், மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தம் கடந்த 1-ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி பார்த்தால் அவருக்கு ரூ. 1000-க்கு மேல் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தானில் புதிய சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. எனவே அமைச்சருக்கு பழைய மோட்டார் வாகனச்சட்டத்தின் ரூ.200 மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கமளித்துள்ளார். 

 

இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லாத் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு தொடக்கத்தில் குறைந்த அபராதமே விதிக்கப்படும். படிப்படியாக அபராதம் கடுமை உயர்த்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

click me!