மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 230 பேர் பலி  

First Published Nov 24, 2017, 9:22 PM IST
Highlights
More than 230 people have been victims of sympathy for the bombing of the terrorists today.


எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தொழுகைக்காக வந்திருந்த 230 க்கும் மேற்பட்டோர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் அல் ராவ்தா என்ற மசூதி உள்ளது. இங்கு ஏராளமான முஸ்லிம்கள் தொழுகைக்காக கூடுவது வழக்கம். வழக்கம்போல் இன்று பலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, மசூதி அருகே வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், மசூதிக்கு வெளியே இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த தாக்குதலில் 155 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பின் எண்ணிக்கை 230 ஐ தாண்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. 
 

click me!